என் ஒருதலை காதலி

உணர்வுகள் தந்தவள்
உழறல்கள் இல்லாமல்
உண்மை காதலது தந்தவள்
ஊடல்கள் இல்லமல்
அவளே என்    ~  ஒருதலை காதலி

தொலைபேசிகள் இங்கே
தொல்லை பேசிகளாகையில்
தொடுதிரையதன்
தொடர் தேய்வதை தடுத்தவள்
அவளே என்    ~  ஒருதலை காதலி

பிற பெண்காண்கையில்
எனை மண்காண வைத்தாள்
என்னவள் விழியதைவிட
பிறிதெலாம் மாயமென வைத்தாள்
அவளே என்     ~  ஒருதலை காதலி

நட்பையும் காதலையும்
நலம்பட கண்டவளளவள்
இன்றேனுமுணர்ந்தாளே
இவன் காதலின் ஆழமதை
அவளே என்     ~ ஒருதலை காதலி

நன்றிகளுனக்கு என்
நலமது உரைத்தமைக்கு
நலமுடன் வாழட்டுமவள்
அவள என்          ~ ஒருதலை காதலி
தீராதவோர் உயிர் வலி.............

எழுதியவர் : Niroshan (3-Jan-18, 8:45 pm)
சேர்த்தது : Thani
பார்வை : 74

மேலே