ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கிறது அரசியல்
பணத்திற்கு வாயைப் பிளக்கும் பிணங்களுக்கு மத்தியில் நடைபெறும் தேர்தல்...
சூழ்ச்சியும், தந்திரமும் பணத்தை நோக்கி பாயும் பிணங்களின் எலும்பும் சதையாய்...
உயிரற்ற பிணங்களுக்கு புத்தி சொல்ல இயலாது கடவுளே வந்தாலும்...
அணு ஆயுதங்களில் உலக அரசியல் நடக்கிறது தந்திரமாக...
நல்ல மதியுடைய இதயங்களே! வாழ்ந்திருங்கள் பத்திரமாக...
வாழ்க்கையின் அடிப்படை தத்துவம் உணராத பிணங்களை எரிக்கப்பட வேண்டியவை கட்டையில் வைத்து...
எரித்தாலும் வேகுவதில்லை பேராசையே உருவான இதயங்கள்...
அட! அவற்றை எரித்து சாம்பலாக்க, கொஞ்சம் பெட்ரோல் கொண்டு வாங்க...
தீயில் எரிந்தாவது பொசுங்கட்டும் அவற்றின் தீமைகள்...