அவசர ஆணை

மங்கல வாழ்வை
தேடி வந்தவளை
அமங்கலமாக்கி
தன்னையும் இழந்து
தான் கொண்டவளையும் இழந்து
தன் நாட்டையும் இழந்து
மக்களையும் இழந்து
சரித்திரத்திலும்
நீதி தவறினான்
நெடுஞ்செழியன் என்ற
கெட்ட பெயரையும்
வாங்கிக்கொடுத்தது
அந்த அவசர ஆணை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (3-Jan-18, 9:33 pm)
Tanglish : avasara anai
பார்வை : 372

மேலே