கதைக்குள் வந்தால் புரியும்
அவளை ஃபெர்ஸ்ட் டைம் எங்க
பார்த்தேனோ அதே
இடத்தில்தான் நானும் என்
வாசகனும் பக்கத்துப்
பக்கத்துல அமர்ந்திருக்கிற
ோம். இன்னும் சொற்ப
வேளையில்
வாழைச்சேனை நோக்கிப்
புறப்படும் புகையிரதம் 5ம்
இலக்க மேடைக்கு வரும்
என்று அன்று கேட்ட அதே
அறிவிப்பு.. ஆனால், இந்த
முறை ஒரு பெண்ணின்
குரல்.
டீ காப்பி... டீ காப்பி...
ஐயா கீயதெக் ?
பனஹய் !
என் வாசகனும் கலைத்துப்
போயிருக்கிறான். நான்
மட்டும் குடித்தால்..., என்
வாயைப் பார்க்கும் சக்தி என்
வாசகனுக்கில்லை.
இருந்தும்..,
"எகக் தென்ட !"
என்னிடம் கைவசமிருப்பது
வெறும் 53 ரூபாய்தான்.
அதில் எப்படி 2 டீ கப்
வாங்குற..?
இருந்தும் நான்
அருந்தமாட்டேன். என் வாசகன்
வெறும் வயிற்றுடன் என்
கதையை வாசித்துக்
கொண்டிருக்கிறான். பசி
வந்தால் பத்தும் பறந்திடும்.
என் வாசகனை இழப்பதற்கு
அணுவளவும்
விருப்பமில்லை. வாசகனே !
இந்தக் கப்பைப் பிடி ! டீயைக்
குடி ! நீ குடித்து
முடித்ததும் ஏப்பம் வந்தால்
தள்ளி நின்று விடு !
நானும் பசியோடுதான்
இருக்கிறேன்.
கையிலிருக்கும் டீ கப்பைத்
தா ! டஸ்ட்பின்ல
போட்டுட்டு வாறன்.. நான்
வரும்வரை ஆறுதலாய்
வாசி ! என்னைத் தனியே
விட்டுட்டு எங்கேயும்
போயிடாதே! நீ
வாசிப்பதை
நிறுத்திவிட்டால்..,
நானும் டீகப்பும் அதோ அந்த
மூலையில்... நிரம்பி
வழிந்து நாறும் குப்பைத்
தொட்டியில்.. என்னையும்
நாறடித்து விடாதே !
வாசகனே எங்கே
போகிறாய் ? என்னிடம்
இப்போது 3 ரூபாதான்
கைவசமிருக்கிறது.
ஃபோன்ல பலன்ஸ் இல்லை.
உனக்கு வாங்கித் தந்த டீ
க்குரிய சல்லி 50 ரூபாவ
என்ட நம்பருக்கு ரீலோட்
பன்னிட்டுப் போ ! தொழில்
தர்மம்னு ஒன்னு
இருக்குதானே !
நில்லு ! நில்லு ! நீயும்
மனுஷன்தானே..
ஏமாத்திட்டுப்
போயிட்டால்., எனக்கு எவன்
ரீலோட் பன்னுவான். நானும்
அந்தப் பக்கம்தான்
போகவேண்டியிருக்கு..
நானும் வாறேன்..
கதைல வாற கதாப்பாத்திரம்
நீயே ஏமாத்திடலாம்னு
நினைக்கும்போது..
கதையே என்னுடையது..
எனக்கு எவ்வளவு வரும் ?
21 April 2017 at 20:51

