அம்மா மறு ஜென்மம் எடுத்து வா என் மகளாக

கருவறையில் உயிரும் உடலும் தந்து
பத்து மாதம் சுமந்த போதும் நான்
உணர வில்லை அவளின் பாசம்!

மார்போடு அனைத்து மடி மீது தாலாட்டு
சொல்லி தூங்க வைத்த போதும் நான்
உணரவில்லை அவளின் பாசம்!

நிலா காட்டி சோறு ஊட்டி நடை
கற்று கொடுத்த போதும் நான்
உணரவில்லை அவளின் பாசம்!

குளிப்பாட்டி தலை வாரி பள்ளிக்கு
அனுப்பி பயில வைத்த போதும் நான்
உணரவில்லை அவளின் பாசம்!

அவள் வயிறு பட்டினி கிடந்தாலும் என் வயிறு
பசியை போக்க விறகு சுமந்த போதும் நான்
உணரவில்லை அவளின் பாசம்!

கஷ்டம் தெரியாமல் வளர்ந்தவள் என் கலீல் சிறு
அடி பட்டாலும் காட்டாறுபோல் அவள்
கண்களில் கண்ணீர் வந்த போதும் நான்
உணரவில்லை அவளின் பாசம்!

வாழும் நாளெல்லாம் எனக்காகவே வாழ்ந்த
என் தெய்வமே,
உன் உயிர் என்னை பிரிந்த போது
உன் பாசத்தை என் ஒவ்வொரு துளி கண்ணீரிலும்
உணர்த்து கொண்டேன் தாயே,.

காணிக்கை இட்டால்தான் கடவுளே கண் திறக்கும்
இவ்வுலகில்.
கண்களை மூடும்போது கூட என்னை
பற்றியே கவலை கொண்ட உனக்கு நான்
என்ன செய்தேன் தாயே,

அம்மா மறு ஜென்மம் எடுத்து வா
என் மகளாக பிறக்க.
உன்னை என் மடி மீது
தாலாட்டினால் தான் நான் பட்ட கடன் தீரும்.

எழுதியவர் : g .m .a .kavitha (2-Aug-11, 9:00 pm)
பார்வை : 543

மேலே