நானும் அழகுதான்...

கனவில் ஒருத்தி கதவைத் தட்ட
நினைவில் ஒருத்தி
இதயக் கதவை மூடுகின்றாள்...

நிலைக் கண்ணாடியில் பார்த்தேன்
நான் அழகானவந்தான்
அவளுக்கு ஏன்
அசிங்கமாய் தெரிந்தேன்.?

காதலித்தாலே
முகத்தில் அழகு கூடுமாமே...!
எனக்கா..?
அவளுக்கா..?

வியர்க்காத முகத்தோடு
மாலை நேரம் பார்த்தேன்
யாருக்குத் தெரியும்
அவளுக்கு
மாலைக் கண்நோயென்று.

காலை நேரம்
கழுவாத முகத்தோடு பார்த்தால்தானே
பெண்ணின் அழகு தெரியும்.
காட்சி கொடுத்து
வெளியில் வந்தால்
அழகுப் பொருளின்
தன்மை புலரும்.

பட்டிமன்றம் வைக்க வேண்டும்
அழகானது ஆண்களா..?
பெண்களா..?
யாரை வைப்பது நடுவராக
அழகு
யாரென்று அறியாமல்..

எழுதியவர் : கமல்ராஜ் (2-Aug-11, 10:27 pm)
சேர்த்தது : கமல்ராஜ்
Tanglish : naanum alakuthan
பார்வை : 331

மேலே