உறக்கத்தில் வந்த தெளிவே
உறக்கத்தில் வந்த தெளிவே
அது ஓர் ஆழ்ந்த உறக்கம்
அதில் ஓர் கனவு - தேவதையாய் அவள்
அவள் என்னை மெல்ல நெருங்கினாள்
அவள் பெயரை கேட்க
அந்த தேவதையின் உதடுகள் உச்சரித்தது
அவள் பெயர்தான் என் இளமையென்று
அதிர்ந்து போனேன்
அதிர்வின் விளிம்பில் நின்றபடியே
அவளை மீண்டும் கேட்டேன் அவள் பெயரை
அவள் சொன்னாள் அவள்தான் என் இளமையென்று
திடுக்கிட்டு விழித்துஎழுந்தேன் வயதானவனாய்
கண்ணாடியில் என்முகம் பார்த்து
உடைந்து சுக்கு நூறாகிப்போனேன்
வாழ்வின் விளிம்பில் வயோதிகனாய் நான்
எத்தனை சீக்கிரம் வாலிபம் கரைந்து
என் வயோதிகம் வந்ததை உணரும் முன்
நான் என் வாழ்வின் விளிம்பில் நிற்கிறேன்
இதற்கா என்தாயை வதைத்து அவள்
இளமையை கொன்று
கருவில் உருவாகி அழகை உருக்கி
மருளும் மயக்கமும் தந்து
பொருள் பொருள் என்று புவியில் ஓடி
இருள் சூழ் முதுமை ஏகி இல்லாமல் போவ்தற்கா
இத்தரையில் பிறந்தேன் மானிடனாய்?
இறந்து பிடி சாம்பலாய்
பறந்து காற்றில் கலப்பதற்கா
உறவுகளின் பிடியில் பொம்மையாய் அலைந்தேன் ?