என்ன இருந்தால் என்ன நீ போதும் என்பேன்

பூக்கள் கோடி இருந்தால் என்ன
உன்புன்னகை ஒன்றே போதும் என்பேன்
நீளும் வானம் முடிந்தால் என்ன
நீங்கா உன்நினைவு வேண்டும் என்பேன்
காற்றின் மௌனம் கலைந்தால் என்ன
கூந்தல் வாசம் நுகர்வேன் என்பேன்
நேற்றும் இன்றும் கடந்தால் என்ன
நாளை நமக்காய் விடியும் என்பேன்

எழுதியவர் : சபரி நாதன் பா (5-Jan-18, 12:26 pm)
பார்வை : 219

மேலே