சம்போ சங்கர மகாதேவா - ராகம் ஜடாதரி
மதுரை சோமு பாடிய ஒரு அபூர்வ ராகம் ஜடாதரி; (கரஹரப்ரியா ஜன்யம்)
ச ரி ம ப த நி
ஸ நி த ப ம ரி
சம்போ சங்கர மகாதேவா
சந்திரசேகரா சுந்தரேஸ்வரா (சம்போ சங்கர)
கௌரி உபதேசி உமாமகேஸ்வரா
கோமதி சங்கர நாராயணா (சம்போ சங்கர)
பசுபதி உமா மஹேஸ்வரா
பர்வத வர்த்தினி சோமாஸ்கந்தா
மீனாக்ஷி சமேத சுந்தரேஸ்வரா
அகிலாண்டேஸ்வரி ஜம்புகேஸ்வரா (சம்போ சங்கர)
கஞ்சி காமாட்சி ப்ரிய ஏகாம்பரேஸ்வரா
காசி விசாலாட்சி விஸ்வேஸ்வரா
சிவகாமி ப்ரிய சிற்சபகேசா
பிரகஸ்பதி பூஜித பிரகதீஸ்வரா (சம்போ சங்கர)
யு ட்யூபில் Madurai Somu-Sambho Sankara Mahadeva-Ragam-Jadathari.wmv என்று பதிந்து
குரலிசை வித்வான் மதுரை சோமசுந்தரம் பாடுவதைக் கேட்கலாம்.