கண்ணதாசன் பாடல் -----Selected Kannadasan Song

அதிசய ராகம் ஆனந்த ராகம்
அழகிய ராகம் அபூர்வ ராகம்

வசந்த காலத்தில் மழை தரும் மேகம்
அந்த மழை நீரருந்த மனதினில் மோகம்
இசையெனும் அமுதினில் அவளொரு பாகம்
இந்திரலோகத்துச் சக்கர வாகம்

(அதிசய)

பின்னிய கூந்தல் கருனிற நாகம்
பெண்மையின் இலக்கணம் அவளது தேகம்
தேவர்கள் வளர்த்திடும் காவிய யாகம்
அந்த தேவதை கிடைத்தால் அது என் யோகம்...அது என் யோகம்

ஒரு புறம் பார்த்தால் மிதிலையின் மைதிலி
மறுபுறம் பார்த்தால் காவிரி மாதவி
முகம் மட்டும் பார்த்தால் நிலவின் எதிரொளி
முழவதும் பார்த்தால் அவள் ஒரு பைரவி...அவள் ஒரு பைரவி...அவள் ஒரு பைரவி

(அதிசய)

எழுதியவர் : (5-Jan-18, 3:04 pm)
பார்வை : 59

மேலே