நீயும் என் தமிழ் வாழ எனக்கு வேண்டும்

வானம் கருத்திருக்க
வந்த காற்று இலை உரசி
ஆட வைக்க
மௌனம் கலைத்த மேகம்
சாரல் அவிழ்க்க
சிந்திய முதல் மழையை
உள்வாங்கும் காய்ந்த நிலமாய்
உன் பார்வை என்னை ஈர்க்குதடி

நள்ளிரவு பனி சிந்த
வந்த பனி மொட்டில் விழ
இருளில் ஒளி வைத்து களவாடி
பனியை வைரமென
மின்ன வைக்கும்
கதிரவன் செயல் தன்னை
உன் காதல் என் தமிழ் மீது
ஏனோ இன்று செய்யுதடி..

இன்பத் தமிழே
என் மூச்சென்னும்
தத்துவம் தான்
உன் எழிழ் முகம் கண்டு
மாற்றம் காண
இன்னும் என் தமிழ்
அழகேற்றம் காண
என்னோடு நீயிருக்க
வேண்டுமென்று தோனுதடி..

பின்னிப் பிணைந்து
நாம் இருப்போமடி
என்னில் வந்து நீ கலந்து
மண்ணில் தமிழ் வாழ
துணை நில்லடி என் காதலி

எழுதியவர் : பாரதி செந்தில் (5-Jan-18, 2:02 pm)
பார்வை : 62

மேலே