காதல் - என்னவள் அவள்
முழுமதி முகத்தாள் அவள்,
மல்லிகை மணம் பரப்பும்
வண்டார்க் குழலி,
மெய்த்தடம் கண்ணினாள்,
சீந்தில் சிற்றிடையாள்,
வண்ண சிறு நுதலில் சிவப்பு
குங்கும பொட்டு இட்டு
தாமரையாம் கைகள் இரண்டில்
சீரார் வளை; ஒலிக்க நங்கை
அவள் புன்னகையாம் நகை அணிந்து
தங்க கோபுரமாய் வருகின்றாள்,
தந்ததில் கடைந்தெடுத்த
அங்கம்தானோ அது ,
அதை மூடி மறைத்து
அழகுக்கு அழகு செய்யும்
நீல நிற பட்டு சீலை,உடுத்தி
யவ்வனத்தில் பூரித்து
குலுங்கும் கொங்கைகள் இரண்டும்
மங்கை அவள் அன்ன நடையில்
கட்டிய அங்கியையும் அத்து
மீறி களிநடம் புரிந்திட
அழகின் உருவாய் அதோ அவள்
என்னை நோக்கி வருகின்றாள்
என்னவள் அவள் , என் கண்கள்
அவள் எழில் நடையை எனக்காக
விழிகளில் பதிவு செய்ய ,என்னையே
மறந்து அவள் எழிலில் கலந்து
ஒரு பதுமையாய் தம்பித்து நிற்கின்றேனே நான் !