தோழி உன் திருடிய இதயம்

நீ பேசாமல்
இருக்கும்போதெல்லாம்
ஊமையாகி போகிறேன் நான்

கண்கள் பார்ப்பதுக்கு
என்பதை
கண்கள் காதலுக்கு என்று
மாற்றியவள் நீ

என் வாகனத்தில்
பின்னால் நீ அமரும்போதெல்லாம்
என்னையறியாமல் கர்வம் பிறக்கும்
நான்
தேவதையின் சாரதி என்று

தொலைவில் நீ இருந்தாலும்
உன் வேட்ப்பத்தை உணரமுடிகிறது
இராண்டடி அருகில் நீ
உன் வெட்க்கம் என்னை அன்னியபடுதுகிறது

இவள்
எனக்கானவள் என்று
மின்னல் வெட்டியது பலரிடம்
ஆனால்
நான் உனக்கானவன் என்று
மின்னலுடன் இடியும் இறங்கியது
உன்னிடம் மட்டும் தான்

எழுதியவர் : (5-Jan-18, 5:18 pm)
பார்வை : 5428

மேலே