தமிழ்ழன்னை

"தமிழன்னை"

பத்துமாதம் ஒரு தாய்யானவள்
தன் குழந்தையை ஈன்றொடுக்கின்றாள்
என் தமிழன்னையோ!.நீ
எம் தமிழ் மொழியை எத்தனை யுகங்கள்
நீ கருவில் சுமந்தாய்
மனிதன் இவ்வுலகில் சாதிக்கின்றான் ஆனால்
எம் தமிழ் மொழியோ சாதனை புரிகின்றாள்
தமிழே இன்னும்
எத்தனை சிறப்பை
உன்னுள் ஒளித்து வைத்தாய்
உன்னுடைய சிறப்பாள் பல வெளிநாட்டு அறிஞர்களை
கொண்டு
உம் மொழியை வளர்த்தாய்
உன்னுடைய சிறப்பு வாய்ந்த நூல்களால்
தமிழின் சிறப்புனைஇவ் உலகத்திற்கு
அமிர்தமாய் உண்ணகொடுத்தாய்
எத்தனை வலிமை வாய்ந்ததையும் அழிக்கும்
காலனை உன் காலால் நீ மிதித்தாய்
இவ்வளவு பெருமையும் தாங்கிக் கொண்டு
கர்வமே இல்லாமல் நின்றாய்(நிற்கின்றாய்)
உன்னைத் தாயாக பெற்றதற்கு
எம் தமிழனை பெருமையடைய செய்தாய்
அது. தமிழே! தமிழ் மொழி மட்டுமே
தமிழ் அன்னை வாழ்க!!
தமிழ் மொழி வாழ்க!!!

எழுதியவர் : சே.சுரேஷ்தழிழ் (5-Jan-18, 10:25 pm)
பார்வை : 105

மேலே