சட்டம்

கொட்டி கொட்டி கிடக்குதம்மா
கட்டு கட்டா பணம்
கேட்ட கேள்வி அத்தனைக்கும்
சட்டம் பதில் சொல்லும்-என
சொல்லி சொல்லி ஓடுதம்மா
கட்சியரின் குணம்

தட்டி கேட்கும் சட்டமெல்லாம்
காசு கொண்டு போய்டுச்சி
காசு கண்ட இடம்தான் கல்வியென மாறிடுச்சி

நீதி கற்று வந்தவர் எல்லாம்
நிதி பக்கம் போயாச்சி
நீதி கேட்டு வந்தவர்க்கு
நீதிமன்றம் பொய்யாச்சு

ஆண்டவனும் ஆள்பவனும் போடுகிறான் ஆட்டம்
அத்தனையும் மக்களுக்கு சட்டம்
புத்தம் புது கட்சி வந்தும்
போடுகிறார்கள் சட்டம்
அதுவும் கூட செல்வந்தர்களின் திட்டம்

சீட்டு மேல சீட்டு போட்டு
கூடுதப்பா கூட்டம்-அதை
ஓடி போய் காக்குதப்பா காவலரின் சட்டம்

காசு மேல காசு கட்டி
வாங்கியாச்சு பட்டம்
கஷ்டப்படும் ஏழைகளுக்கு
பட்டமில்லை சட்டம்

எழுதியவர் : அஸ்வந்த் (9-Jan-18, 6:56 pm)
Tanglish : sattam
பார்வை : 74

மேலே