இக்கால அரசியல்

அடிமைகளை உருவாக்கும் அரசாட்சி
அதிகாரிகளுக்கு இல்லை மனசாட்சி
பாமரன் வாழ்க்கைதான் சாட்சி....

கொடி நாட்டி கோட்டை ஏறுவான்
கோடி சேர்த்தும் குடிசையும் கேட்பான்

மேடை போட்டு ஆயிரம் பேச்சு
மேசைகள் போட்டதும் காணாமல் போனது
தேவர்களை அழித்து அன்று அரக்கன் வாழ்ந்தான்
தேசத்தை அழித்து இன்று தலைவன் வாழ்கிறான்

வரி கேட்டு அன்று வெள்ளையன் வந்தான்
வரி வாங்கித்தான் இன்று வேந்தனும் ஆள்கிறான்

விலையின்றி பொருட்கள் அளிக்கிறான்
விலை கொடுத்துதான் ஓட்டினை பெறுகிறான்

எழுதியவர் : அஸ்வந்த் (9-Jan-18, 5:11 pm)
Tanglish : ikkala arasiyal
பார்வை : 377

மேலே