புத்தகம்

மலர்கள் தென்றல் தொட்டு
திறக்கும் புத்தகம்
இதழ்கள் புன்னகை தொட்டு
விரியும் புத்தகம்
இமைகள் காதல் தொட்டு
மலரும் புத்தகம்
கவிதை கவிஞன் எழுதும்
காதல் புத்தகம்
மனம் மனிதன் நித்தம்
திறக்கும் புத்தகம்
இயற்கை இறைவன் எழுதிய
அற்புத புத்தகம்
புத்தகம் எல்லாம்
கலைவாணியின் கை அடக்கம்
அந்தக் கலைவாணி
நான் வணங்கும் தெய்வம்
----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Aug-11, 8:53 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : puththagam
பார்வை : 346

மேலே