தலையணைக்கவிதை
பாதுகாப்பு வளையமாய் குழந்தைக்கு
காதலனை நினைத்த காதலிக்கு
காதலியை நினைத்த காதலனுக்கு
அழுகையின் துடைப்பிற்கு
கோபத்தில் கிழித்தெறிவதற்கு
நோயாளின் ஆறுதலுக்கு
பக்க பலமாய் பயந்தவர்க்கு
காமத்தில் கட்டி அணைப்பதற்கு
கணவன் மனைவியின் செல்ல சண்டைக்கு
கொலை செய்ய கொலைகாரனுக்கு
நல்லவனோ கெட்டவனோ
இரவு முழுவதும் தாலாட்டி தூங்கவைக்கும்
இன்னொரு தாய் ...
தலையணை...
எழுத்து,
ஜெகன். G