தீபாவளி நல்வாழ்த்துக்கள் - 2015

வட்டிக்கு பணம்...
தள்ளுபடி புத்தாடை..
அனுமதி கிடைத்த, கிடைக்காத விடுப்பு
ஒரு இருக்கையில் இரண்டுபேர் - பேருந்தில்
ஏழை வீட்டில் அரிசிச்சோறு
அப்துல்கலாமால் ஏவப்படாத ராக்கெட்
பிடிக்காத தெய்வத்திற்கு குண்டுவைப்பு
தரையில் ஒளிரும் எரிகற்கள்
அணுகுண்டு சோதனை புஷ்வானத்தில்
ஒரு வாரம் கழித்து உயிர்த்தெழும் பட்டாசு
எல்லாம் முடிந்து மீண்டும் திரும்புவோம்
நகரத்தில் பள்ளிக்கும்
கிராமத்தில் பட்டாசு தொழிற்சாலைக்கும்...

"ஆகாயம்" தெளித்த
மழை"நீர்" சேர்ந்த "நிலத்தில்"
"காற்றில்" அணையாது
ஒளிரும்
பாரம்பரிய"த்தீப"த்திருநாள் நல்வாழ்த்துக்கள்

எழுத்து,
ஜெகன். G

எழுதியவர் : ஜெகன் G (10-Jan-18, 11:01 am)
பார்வை : 36

மேலே