குறை இருப்பது நம்மிடம் தான்

குரங்குக் கூட்டம் இறைவனின் படைப்பு தானே.
அவற்றில் ஏன் ஏழை, பணக்காரனென்ற பாகுபாடுகள் இல்லை?

கூடி உண்ணும் காக்கைகளைப் பாருங்க!
இறைவனின் படைப்புதானே.
அவற்றில் ஏன் ஏழை, பணக்காரனென்ற பாகுபாடுகள் இல்லை?

பகுத்தறிவுள்ள மனிதர்களே!
உங்களில் காணப்படும் பாகுபாடுகளெல்லாம் நீங்கள் உருவாக்கிக் கொண்டவையே.

மனதில் எத்தனையோ பாகுபாடுகள் புதைத்திருக்க அவற்றை அடுத்தடுத்த தலைமுறையினர் மனங்களில் விதைத்துவிட்டு,
எதைப் பகுத்தறிய வேண்டுமோ, அதைப் பகுத்தறியாது, அறியாமையில் மூழ்கி மூச்சடைத்து அறிவிறந்த கூட்டங்களாய் பழங்கதைகளைப் பேசித் தானும் குழம்பி, அடுத்தவரையும் குழப்பி அறிவுஜீவி என்று போலி முகவர் தாங்கி பூமிக்குப் பாரமாய் உலாவும் குப்பைகளாய் வாழ்கிறீர்கள் பெயருக்கு மட்டும் மனித சமுதாயம் என்று கூறி.

இருப்புப்பெட்டிக்கும், இதயத்திற்கும் சமந்தம் இல்லையென்பதை தெளிவுபடுத்தும் நாகரீக கோமாளிகளாய் வேஷமிடும் கொடூரமானவைகளே!

பாம்பின் விஷம் உடலில் புகுந்தால் தன்னை மட்டுந்தான் அழிக்கும்.
இந்த மன விஷம் தலைக்கேறினால் தன்னோடு சுற்றத்தாரையும் அழிக்கும்.

மன விஷம் மனங்களைவிட்டு இறங்க அருட்பெரும்சோதியே!
தனிப்பெருங்கருணையே!
அருள்வாய் அனைவருக்கும்.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (10-Jan-18, 9:44 pm)
பார்வை : 1467

மேலே