உணர்வீரோ
============
குண்டு துளைக்கா தொருவா கனமதில் கோட்டைக்கு
வண்டாய் விரைந்துள் நுழைந்து சபைக்கு வணக்கமிட்டு
கொண்ட கருத்தினை ஆணித் தரமெனக் கூறியதால்
மண்டை யுடைந்து மருந்தகம் சென்றவர் மந்திரியே!
மக்களுக் காகவே கூடிடும் பாரா ளுமன்றத்தில்
சிக்கலைத் தீர்க்க அனுப்பிய பேர்கள் செகமெல்லாம்
நக்கலாய் பேசி நகைப்பது போன்று நடந்துகொளுல்
தக்கதாய் இல்லை, தமையுணர் வீரோ தலைவர்களே!