தமிழன் வாழ்க்கை ஓர் கிழிந்த காகிதம்
கொடுங்கோல் ஆட்சியும்மதிகாரமும் விளைத்த, அரசன் என்றும் தன் மறை தழுவிட உழைத்ததில்லை...
தமிழன் உயர்ந்திட விளைத்திட்ட ஆட்சி.....
தமிழனின் தலைக் கொய்யவென் ரரியாப் போச்சே......
தமிழனின் பண்பு தளிர்விட உழைத்தால்.....
தட்டிச்செல்கிறான் தன் பெயரிட்டு....
தடுமாறும் உலகில் நாமோ
தடம் மாறி முளைத்துவிட்டோம்....
தட்டிக்கொடுக்க ஒருவனுமில்லை....
தட்டிக்கேட்க கைகள் இணைந்தால்....
தலை நிமிர்ந்திட வுன்தலை கிடையாதென்றான்.....
வெள்ளை காகிதம் போல் வெறுமைஆய் தமிழன் இருக்க....
கருமையைத் தீட்டி மகிழ்ந்தான் யெவனோ...