டேட்ஸ்

பேரீச்சம் பழம் வாங்கலியோ
ஈயம் பித்தளைக்கு
பேரீச்சம் பழம் வாங்கலியோ
என்று ஒருவன் தெருவில் கூவிச் சென்றான்
ஒரு பெரியவர் அவனைக் கூப்பிட்டார் .
நானும் பல வருசமா பார்க்கிறேன் பேரீச்சம் பழம்தானா
வேறு பழம் கிடைக்கலையா ?

நான் ஊர் ஊரா தெருத் தெருவா போய் விக்கிறவன்
மத்த பழங்களெல்லாம் ஒன்னு ரெண்டு நாள்ல அழுகிடும் சாமி ....பேரீச்சம் பழம்
அழுகாது .

பெரியவர் விடவில்லை
பின்ன முந்திரிப் பழம் --கிஸ் மிஸ் கொடுக்கலாமே !

கொடுக்கலாம் ஆனால் இது லயன்ஸ் டேட்ஸ் ....சிங்கம் போல ஸ்டெரெங்த்

பெரியவர் உள்ளே ஓடினார் மனைவியும் வீட்டில் இல்லை .
பழைய ஈயச் செம்பு ---ரசம் மணக்கும் --பழைய பித்தளை பாத்திரம் ---இப்பொழுதெல்லாம்
பார்க்க முடியாது அது போல --எடுத்து வந்தார் கொடுத்தார் . சிங்கம் டேட்ஸ்
வாங்கிக் கொண்டார் .

பாத்திரங்கள் பரம்பரை பரம்பரையாக தாய் வீட்டுச் சீதனமாய் வந்தவை .
வீட்டம்மா வந்ததும் இருக்கிறது பெரியவருக்கு மண்டவப்படி !

எழுதியவர் : கவின் சாரலன் (12-Jan-18, 4:17 pm)
Tanglish : tets
பார்வை : 96
மேலே