காதுச் சுட்டி

யக்கா, நம்ம தங்கச்சிங்க ரண்டு பேரும் பட்டணத்தில படிச்சவங்க. எவ்வளவு நாகரீகமா இருக்கறாங்க பாரு யக்கா.
😊😊😊😊😊😊
ஆமாம்டி வடிவு. நாம கிராமத்தில கெடக்கறவங்க. அவுங்க அணிறதை எல்லாம் நாம அணிய முடியுமா? அவுங்க ரண்டு பேரும் பேரக்கூட மாத்திட்டாங்களாமே.
😊😊😊😊😊
ஆமாம் யக்கா. சின்னவ அம்மா அப்பா அவுளுக்கு 'சிவகாமி' -ங்கற பேர வச்சாங்க. பிரபல தொழிலதிபர் சிவநாடார் தன்னோட பேர ஷிவ் நாடார்ன்னு மாத்திட்டாராம். அவுரு நடத்தற பல்கலைக் கழகத்தில படிக்கிற நம்ம சிவகாமி அவ பேர 'ஷிவ்காமி' -ன்னு மாத்திட்டாளாம். அங்கயே படிக்கற நம்ம கடைசித் தங்கச்சி விஜய மல்லையா 'விஜய் மல்யா' ஆனமாதிரி 'தங்கம்மா' -ங்கற அவளோட பேர 'தங்மா' -ன்னு மாத்திட்டாளாம். அங்க பாரு யக்கா, அவுங்க ரண்டு பேரோட புருவத்துக்கு மேல தொங்கற முறுக்களவு நெத்திச் சுட்டி ரொம்ப அழகா இருக்கு யக்கா ரண்டு பேரும் ஆளுக்கு இன்னும் ரண்டு நெத்திச் சுட்டி வாங்கி ரண்டு காதையும் மறைக்கற மாதிரி நடுமண்டையிருந்து தொங்கவிடணுமாம். அதை அணிஞ்சு கின்னசு சாதனை படைக்கப்போறாங்களாம். சரியக்கா, காதை மறைக்கற அந்தச் சுட்டிக்கு என்ன பேரு வைக்கறது?
😊😊😊😊
அடி வெவரங் கெட்டவளே. நெத்தில தொங்கறது நெத்திச் சுட்டின்னா காதை மறைக்கற மாதிரி தொங்கறத 'காதுச் சுட்டி'ன்னுதான் சொல்லணும்

எழுதியவர் : மலர் (12-Jan-18, 1:09 am)
பார்வை : 128

சிறந்த நகைச்சுவைகள்

மேலே