பொங்கலோ பொங்கல்
*வண்ண வண்ண உடை உடுத்தி
வலம் வருவாள் சிங்காரி
*கால்களிலே இறக்கை முளைக்க
கடைத்தெருவில் சுற்றிடுவாள்
*கை வளையல் கலர் பூச்சு
கரும்பு குவியல் பானை சோறு
*தெருவெல்லாம் திருவிழா
திண்னையோரம் பெரும் விழா
*பேசிடுவோம் சிரித்திடுவோம்
இரகசியங்கள் புதைத்தது வைப்போம்
*சிங்காரி வருகையிலே
கண் சிமிட்டாமல் பார்த்து நிற்போம்
*காதலும் தான் அரும்பிடுமே
உற்சாகமும் ஊறிடுமே- அந்த
அனுபவமும் பாடம் சொல்லிடுமே
*
நெஞ்சினிலேபூட்டி வைப்போம்
இரகசியங்கள் காத்து நிற்போம்
*நினைவுகளில் வாழ்ந்திடுவோம்
அந்த சுகம் தரும் போதையிலே
இந்த உலகை வெல்வோம்!!
சிவ.ஜெயஸ்ரீ