எவ்வாறே மாமாறன் தண்கண் அருள்பெறுமா தான் - முத்தொள்ளாயிரம் 62
ந’ன’வில், பு’னை‘யிழாய் – வர்க்க எதுகை,
எ‘ன்’கண், த’ண்’கண் – மெல்லின எதுகை
அமைந்த நேரிசை வெண்பா
கனவை நனவென் றெதிர்விழிக்கும் காணும்
நனவில் எதிர்விழிக்க நாணும் – புனையிழாய்
என்கண் இவையானால் எவ்வாறே மாமாறன்
தண்கண் அருள்பெறுமா தான். 62 முத்தொள்ளாயிரம்
பொருளுரை:
அழகாக இழைக்கப்பட்ட அணிகலன்களை அணிந்த தோழியே!
கனவில் தலைவனைக் கண்டு நனவு என எண்ணி தலைவனாகிய பாண்டியனை என் கண்கள் காணும். கனவு கலைந்து, நனவில் எதிரே காணும்போது பாண்டியன் நேரில் அங்கில் லாததால் கண்கள் நாணமடையும்.
என் கண்கள் இத்தகையதானால் மாண்புமிகு பாண்டிய மன்னனுடைய குளிர்ந்த கண்களினால் என்னைக் காணக்கூடிய அருட்தன்மையை என் கண்கள் எவ்வாறுதான் பெறும்?
விளக்கம்: எதிர்விழிக்கும் – எதிரே பாண்டியனைப் பார்க்கும், நாணும் – நாணம் அடையும்,
மாமாறன் – மாட்சிமையுடைய பாண்டியன், தண்கண் – குளிர்ந்த கண்கள்