கம்பன் வர்ணித்த கடைசி கவிதை என் காதலி

கவி கொட்ட உவமை இல்லை
கவிஞனே உனக்கும் மனமில்லை
கருணை கொண்டு எழுத்து விடு
கல்லறையை திறந்து ஒரு கவி கொடு
என் காதலுக்காய் ......

(எழுந்து வந்த கம்பனின் வர்ணனை)

பனி கூடத்தில் அமிர்தம் இவள்
கருவறை திங்களில் பௌர்ணமி இவள்
வரையறை இல்லா வானம் இவள்
அகடு இல்லா வகுடு எடுத்த கொள்ளை அழகு இவள்

இவள் விழிகளை நகல் எடுத்து
வின் மீனை படைத்தானோ
இவள் காலோசை நகல் எடுத்து
நகரும் நதிகளுக்குள் புதைத்தானோ

பொல்லாத பேரழகு
பொம்மை போல ஓரழகு
புல்லாங்குழலென துளையிட்ட
பொன் பதிந்த மூக்கழகு

திருக்குறள் வரிகளை போல இரு இதழ்
இதலுக்குள் புதைந்துள்ளது 32 அதிசிய
பொருள் இவள் ...


இரு பதினாறு தாஜ்மஹால் கொண்டு
இரு இதழால் தாழிடப்பட்ட இவள் செவ்வாய்
பிரம்மனால் கட்ட பட்ட பிரமாண்ட பேரழகு

அவளுக்காய் ஏடுகளின் பாதையில்
பாத யாத்திரை மேற்கொண்ட
என் பேனாவையும் எழுதி முடித்தவுடன்
புதைத்துவிடுவேன் இனி யாருக்கும்
பயன்படாது என உறுதியாய் சொல்லி விடுகிறேன்...

எழுதியவர் : ராஜேஷ் (13-Jan-18, 5:28 pm)
பார்வை : 143

மேலே