அகத்தின் ஆட்சியாளர்

யார் என் தேவனென்று தெரியுமா ?

அவரே உடைந்த என் மனதை
ஆற்றி தேற்றி அமைதியை அளிப்பவர் !
அனைவரும் அழுத்தமுறும் நிகழ்வுகளிலும் - நான்
அசராத மனமும் திடமும் கொண்டுள்ளதை உணர்ந்தேன் !
அமைதியின் நிழலில் நான் புகுந்ததை சுவாசித்தேன் !
ஆச்சிரியமாக அனைவரும் கண்ட நிகழ்வுகள் பல !
அசைவாடும் உள்ளம்தான் எனக்கும் - ஆனால்
அன்பும் நேசமும் என்று அசைந்ததில்லை அவரினால் !
அழுகையின் நாட்களும் சில உண்டு - ஆனால்
அழுத்தி என்னை புதைத்ததில்லை அவரால் !
அடிகள் பெற்ற சோர்வும் சில உண்டு - ஆனால்
அன்றாட வேளைகளில் தவறியதில்லை அவரால் !
அடுக்கினால் கவியும் கட்டுரையாக மாறிப்போகும்
அத்தனை உறுதியும் உறுதுணையுமானவர் !
ஆன்மாவின் ஆறுதலும் ஆரோக்கியமும்
அன்பின் முழு ஆட்சியாளரும் என் தேவனே !
அவரின் நிழலும்
அற்புத ஆற்றலும்
ஆறுதலின் தேற்றலும்
அரவணைப்பின் நேசமும்
அசைவுற செய்யாது
அமைதியும் அக்களிப்புமாய்
அன்றாட வாழ்வில் நடைபோட செய்கிறது !
அவருக்கு உருவமுமில்லை
அவர் முற்றிலும் ஒளிமயமானவர்
அவரை காண கண்ணல்ல ,
அத்துணை பரிசுத்தமானவர் !
அவருக்கு ஜாதியுமில்லை மதமுமில்லை !
அனைத்து மானிடருக்கு தந்தையானவர் !
அவரே என் உயிரின் உருவானவர் !

எழுதியவர் : ச.அருள் (13-Jan-18, 5:15 pm)
சேர்த்தது : சஅருள்ராணி
பார்வை : 154

மேலே