ஆற்றிடும் அரவணைப்பு

அமைதியிழந்து வேளையில்
அவர் மடியென விவிலியத்தில்
அழுகையோடு என் சிரம் வைப்பேன் ,
அடுத்தநொடி உதட்டோரம் சிரிப்பும்
அரவணைப்பில் கதகதப்பும்
அவர் கரம் என் முடி கோதுவதான உணர்வும் !
அத்தனை மென்மையும் அழகுமென
அதிசயம் மனமுழுதும் மலர் ததும்பும் !

சுற்றி அரை முழுதும் வெண்மை குடியேறும்
சுகமான சிலிர்த்திடும் தருணமது !
சிதைக்கும் எட்டாது
சொல்ல கவிக்கும் வார்த்தை கிட்டாது !
செல்வனுக்கு எட்டாத விலை ,
சுவை போஜகனுக்கும் கிட்டாத சுவை !
சிறு குழந்தையென மகிழும் உள்ளம்
சுவையினை உணரும் தருணம் !
சோகமா எப்போது எதற்க்காக என்று நானே
சற்று எண்ணும்வண்ணம் என்
சிந்தையும் நினைவிழந்து போகும் !

இனிய என் தேவனை கண்டதில்லை
இன்றுவரை பெயரும் அறியாது ,
இஃது என்று சான்றும் புரியாது - ஆனால்
இகத்தினில் அறிந்தேன் சான்றும் உணர்வுமென
இன்றும் காண்கிறேன்
இனித்திடும் இனிமையானவர் !
இவ்வுலகிலும் வானுலகிலும்
இவரே என் முதல் நேசரும் உறவும் !
இனிமைமிகு இனிமையானவர் !
இசையிலும் அசைவிலும் - அவர்
இல்லா இடமுமில்லை மறைவுமில்லை !
இகத்தின் என் இனிமை !
இனிப்பினை சுவைத்ததால் பகிர்ந்தேன் !

எழுதியவர் : ச.அருள் (13-Jan-18, 6:09 pm)
சேர்த்தது : சஅருள்ராணி
பார்வை : 230

மேலே