பொங்கலோ பொங்கல்
ரதமேறிய கதிரவன்
நாடெல்லாம் சுற்றி வர . . .
தமிழ் மகள் வாசலிலே
வானவில்லை தோரணம் கட்டி ...
செங்கரும்பு தோகை விரித்து
மண் பானையும் மந்திரம் சொல்ல. ..
அச்சு வெல்லம்
பச்சரிசி நெய் சேர்த்து ...
பொங்கி வரும் தருணத்திலே
இருள் விரட்டும் இறைவனை
நம் அகத்தினிலே
ஒளி படர
கை கூப்பி
நன்றியுடன்
வணங்கிடுவோம்
பொங்கலோ பொங்கல் 🙏🙏
அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் 😊😊🙏🙏
இங்ஙனம்
👉மருதுபாண்டியன்.க