அவள்
=====
இல்லா திருந்திடினும் இல்லத்தில் லாததொன்றும்
இல்லையெனச் செப்பிடும் இல்லாளே – இல்லாளாம்.
அல்லா தவரெல்லாம் அன்றாடங் காய்ச்சியாய்
அல்லாடு வாறே அறி.
இல்லா தவன்தன் இணையாக வாய்த்திடினும்
அல்லல் களைந்திடும் ஆரணங்கு – பொல்லா
வறுமை புகுந்தேதான் வாட்டிடினும் வாழ்வை
நறுமண மாக்குவாள் நம்பு.
*மெய்யன் நடராஜ்