சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் 40 கர்மமே ப லவந் தமாயா தல்லி - ஸாவேரி
தியாகய்யர் தன் மனைவியுடன் நாகப்பட்டினம் விஜயம் செய்ததாகவும், அவருடைய மனத்திற்கு வருத்தம் தந்த சம்பவம் ஏதோ நிகழ்ந்ததாகவும் சரித்திரக் குறிப்புகளில் காணப்படுகிறது.
கர்மமே ப லவந் தமாயா தல்லி என்ற கிருதியில் அவரே இதைக் குறிப்பாகக் காட்டியுள்ளார்.
பொருளுரை:
தாயே! காயாரோகணப் பெருமானின் பத்தினியே! என் வினைப்பயனே (கடைசியில்) வலியதாகி விட்டதே! மாசற்ற நாகப்பட்டினத்தில் எழுந்தருளியிருக்கும் நீலாயதாட்சியே! சகல உலகிற்கும் சாட்சியே!
உலகில் தனவந்தர்களை அடுத்தும் என் பலவிதக் கஷ்டங்களைத் தீர்க்க மாட்டார்களென்று துணிந்து விரைவில் நான் புறப்பட்டு வந்து உன் சந்நிதியை அடைந்தும் (என் வினைப்பயன் வலியதாகி விட்டதே!) தூயவளே!
சமுத்திரம் தன் மந்த்தில் கருவம் கொண்டு இப்புவிக்கு வர நினைத்த சமயம் உன்னைக் கண்டு தலைவணங்குமாறு செய்யக்கூடிய தீரத்தனமுள்ள உன்னைத் தரிசித்தும் (என் ஊழ்வினையே வலுத்து விட்டது)
பணத்தாசையற்ற என் உள்ளத்திற்கு உன் கருணையே செல்வமென்று கூறி, நிறைந்த ஆசையுடன் வந்து உன் சந்நிதி சேர்ந்த மெய்யடியவனான இத்தியாகராஜனுக்கு (வினைப்பயன் வலியதாகி விட்டதே!)
பாடல்:
பல்லவி:
கர்மமே ப லவந் தமாயா தல்லி
காயாரோ ஹண ஜாயா (கர்)
அநுபல்லவி:
நிர்மலமகு நாக புரமுந நெலகொந்ந
நீலாய தாட்சி ஸகலலோக ஸாக்ஷி (கர்)
சரணம்:
தரநு த நிகல கோ ரி நாநா
பரிதாபமுல் தீ ர்ப்பலேரைரி யநி
ஸரகு ந நே ப யலு தே ரி வச்சி
பரமபாவநி நீ ஸந்நிதி ஜேரி நா (கர்)
வாரிதி மதி க ர்விஞ்சி ஈ
வஸு த கு தா ராநெஞ்சி நிந்நு
ஸாரெகு க நி தலவஞ்சி யுண்டு
தீ ரதநமு க ல்கு நிநு பொ ட கா ஞ்சி நா (கர்)
காஸாஸ லேநி நாமதி கி நீ
கருணே த நமநி ப ல்கி நிண்
டா ஸதோ வச்சி ஸந்நிதி நி நிஜ
தா ஸுடை ந ஸ்ரீ த்யாக ராஜுநிகி (கர்)
யு ட்யூபில் Thyagaraja Kriti-karmamE-balavanta--sAvEri--chApu- Sitaraman என்று பதிந்து திரு.சீதாராமன் பாடுவதைக் கேட்கலாம்.
யு ட்யூபில் KJ Yesudas - Karmame_Balavanta - Saveri – Thyagaraja என்று பதிந்து KJ. யேசுதாஸ் பாடுவதைக் கேட்கலாம்.