தமிழன் நாடாளும் நாள்

தமிழன் நாடாளும் நாள்

நண்பர்களே!
தமிழ்நாட்டை
தமிழர் தான்
ஆளவேண்டும்
என்பது
அரசியல் சாசனத்திற்கு
எதிரானது
என்பது
உணர்க!

ஆள்வதற்கு
ஆளுமை தான்
அவசியம்!

தமிழ்-
தமிழரல்லாதவர்களாலும்
தழைத்தது
என்பதையும்
தழைத்தோங்கி
வருகிறது
என்பதையும்
மறுப்போர் எவர்?

கலை
இலக்கியங்களில்
தமிழைச் சூடி
மகிழ்ந்தோரும்
தரணியை
மகிழ வைத்தோரும்
எவர்?

அருந்தமிழை
ஆய்ந்து
செம்மொழியென
பகன்றவர்
அந்நியரியன்றி
எவர்?

இன்றும்
பண்ணிகர் தெலுங்கு துளுமலையாளம்
மொழியினர்
அல்லவா
தமிழை
ஆராதிக்கின்றனர்.

ராமன் ஆண்டாலும்
ராவணன் ஆண்டாலும் எனக்கொரு
கவலையில்லை
என்று வாயசைத்தவருக்கு
எதிரான
குரலே இது.

இந்திய அரசியல்
சாசனத்திற்கு
எதிரான
குரல் இது.

ஆளத் துணிவோரை
மொழியால்
இனத்தால்
சாதியால்
அடையாளம்
காணாமல்
அவர்தம்
எண்ணம் கொண்டு
எடை போடுக.

தமிழருக்கு
அவரது
கொடை காண்க.

தனியொரு
மனிதர்
மட்டும்
தமிழர் தலைவரைத்
தேர்ந்தெடுக்க
இயலாது.

ஆன்மீக அரசியல்
என்றாலும்
கருத்தியல்
அரசியல்
என்றாலும்
தமிழ் நாட்டை
உயர்த்தும்
உறுதியும்
திண்மையும்
எவருக்குளது
என
ஆய்க.

பன்மொழி
பேசுவோரை
அணைத்து
அகமகழ்வதே
தமிழின்
உன்னதம்.

அதனாலன்றோ
வாழ்கிறது
இன்றும்
நம்தமிழ்.

தமிழ் பேசும்
தமிழர் நலம்
பேசும்
எவரும்
தமிழனை
ஆளலாம்
மக்கள் நினைத்தால்
மட்டும்!

தமிழனை ஆள
எண்ணுவோரே...
நெஞ்சில் உரமும்
நேரிய எண்ணமும்
மானுடப் பற்றும்
கொண்டோரை
மட்டும்
தலைமையேற்க
தமிழகம்
முனையும் என்பது
அறிக.

கலைப் பணியால்
கிடைத்த புகழாலும்
இரசிகர் பட்டாளத்தாளாலும்
கணக்கற்ற
நோட்டுக்கற்றைகளாலும்
மட்டும்
தமிழகத்தை
ஆண்டு விட முடியாது
என்பது உணர்க.

திராவிடத்தை வீழ்த்த
எண்ணுவோருக்கு
அணுசரணை
செய்ய எண்ணிணாலும்
தவிடு பொடியாகும்
என்பதையும்
அறிக.


தமிழ் நெஞ்சங்களே!
அறப்போருக்கு
தயாராகுக.
அறநெறி அரசியல்
ஆட்சியாளரை
அரியணையில்
அமர்த்திடவே!

-சாமி எழிலன்
17 01 2018

எழுதியவர் : சாமி எழிலன் (17-Jan-18, 5:44 pm)
பார்வை : 552

மேலே