குழந்தை
உன் குறும்புச் சிரிப்பு
குதூகலப் பார்வை
மழலை மொழி பேசும்
மரகதக் கண்கள் - அவை
மூடி விரியும் முல்லை மலர்கள்
உன் கொவ்வை இதழ்கள்
அதி தேன் வடியும் எச்சில் சாறுகள்
ஆகா...!!! எத்தனை அழகு...!!!
ஆயுள் ஒண்டு போதவில்லையே
உன் அழகை இரசிப்பதற்கு.....
உன் பிஞ்சு கால்கள் நோகாமல்
என் நெஞ்சிலே தடம் பதித்து
கொஞ்சி நடை பழகு....
உன் எச்சி தோய்ந்த
அஞ்சு விரல்களால்
என் நெஞ்சிலே அகரம் எழுத்து
உன் தீராத குறும்பால்
எனை தினம் தினம்
தொல்லைப்படுத்து
என் ஆறாத காயங்களும்
அதில் ஆறிப் போய்விடும்...