சாமியும் சவமும்

சாமியும் சவமும் ஒண்ணு
இரண்டும் பேசாது

சாமியும் சவமும் ஒண்ணு
ஒன்றுபடுத்திருக்கும்
அல்லது நின்றிருக்கும்
இல்லாவிட்டால்உட்கார்ந்திக்கும்

சாமியும் சவமும் ஒண்ணு
மாலைபோட்டு
கையெடுத்துகும்பிடுவார்
மரியாதைக்கும் பக்திக்கும்

ஊர்வலமும் உண்டு
மேளதாளமும் உண்டு
ஆட்டமும் உண்டுபாட்டும்உண்டு
"அடங்கி போனவர்கள் முன்
அடங்காதவர்களின் கூத்து"

முக முகப்புவிளக்கில்
முகம் பார்க்க முடியாதவர்களுக்கு
அகவிளக்கு அணைந்து
போனவர்களின் கையில் தீவட்டி

கொள்ளிபோட
நான்நீ என்று
உரிமையோடு
ஊரரிய சண்டை
கற்பூரம் ஏற்றி

சோறு போடாதவன்கூட
வாய்க்கரிசி போடுவான்
சோறுவடிச்சி தானமும் போடுவான்

ஆண்டவனுக்கும் பால்
ஆவி துறந்தவனுக்கும் பால்
குடிக்காதவர்களுக்கு
குடம்நிறைய

ஆனந்தத்திலும் அழுகை
துக்கத்திலும் அழுகை மனிதர்களுக்கு
காதில் வாங்கிக் கொள்ளாத
கனவான்கள் இவர்கள்

ரெண்டுபேரையும்
கடலிலும் கரைப்பார்கள்
கங்கையிலும் கரைப்பார்கள்

சாமியும் சவமும் ஒண்ணு
பம்பை உடுக்கைவைத்து
வீட்டுக்கு வருணித்து வருவார்கள்
வருங்காலத்தை பற்றியும் கேட்பார்கள்

சாமியும் சவமும் ஒண்ணு
இந்த பூமியில் மட்டும்

எழுதியவர் : (17-Jan-18, 10:55 pm)
பார்வை : 45

மேலே