சுற்றுப்புற தூய்மை

நம்மையும் வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டுமென நினைக்கும் நம்மில் எத்தனை பேர் நாட்டை சுத்தப்படுத்த வேண்டுமென்று நினைக்கிறோம்...?? பத்து சதவீதத்தினர் மட்டுமே நினைத்து பார்ப்போம். நாம் வசிக்கும் தெருவில் பத்து நாட்களாய் கழிவு நீர் வடிந்துகொண்டிருக்கிறது. எத்தனை பேர் மாநகராட்சி அலுவலகத்தில் சென்று புகார் கொடுத்திருப்போம்..?! யாராவது புகார் கொடுப்பார்கள் என்று அந்த இடத்தை விட்டு கடந்து சென்று விடுவோம். இதே நமது வீட்டில் இப்படி நடந்தால் விட்டு விடுவோமா..?? நேராக மாநகராட்சி அலுவலகம் சென்று கையோடு ஆட்களை அழைத்து வந்து சரி செய்வோம்.

பூமியில் வெப்பம் அதிகரித்து காணப்படுவதற்கு முக்கிய காரணம் காடுகளை அழிப்பதுதான். பூமியில் வெப்பம் அதிகமாவதால் பனிமலைகள் உருகி கடல் மட்டம் உயர்ந்து வருகிறது. வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க வேண்டுமென்கிறார்கள். என்னை கேட்டால், பூமியில் பிறந்ததற்கு ஒரு மரத்தையாவது வளர்த்து விட்டுப்போக வேண்டும் என்பேன். நாம் எந்த ஒரு பெரிய சாதனையையும் செய்து விட வேண்டாம். ஒரு மரத்தை நன்கு பராமரித்து வளர்த்தாலே போதும். பூமியில் குறைந்து கொண்டு வரும் ஆக்ஸிஜன் அதிகரித்து விடும்.


அமெரிக்காவில் விஷக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டினால் ஒன்றே கால் கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது, வாகனங்களுக்கு வருடம் தோறும் புகைப்பரிசோதனை செய்யப்படுகிறது. சுற்றுப்புற தூய்மைக்கெல்லாம் அபராதம் போட்டால்தான் செய்வேன் என்றால் நமக்கு பின்வரும் சந்ததியினர் குறைகளோடுதான் பிறப்பார்கள்.


நாம் உயிர் வாழ்வதற்கு முக்கிய ஆதாரமாக இருப்பது தண்ணீர். எப்படி தாய் பாலில் கலப்படம் செய்தால் அதற்கு பயன் இல்லையோ, அதே போல் குடி தண்ணீரில் கலப்படம் செய்தாலும் பயன்படுத்த முடியாது. மூன்று விழுக்காடு தண்ணீர் இருக்கும் பூமியில் ஒரு விழுக்காடு தண்ணீர் மட்டுமே பயன்படுத்த முடிகிறது. அந்த தண்ணீரையும் மாசு படுத்தி வருகிறோம். நொய்யல், காவேரி, பாலாறு போன்ற நதிகளை சாயப்பட்டறை மூலமாக மாசு படுத்தி விட்டோம். இருபது வருடங்களுக்கு முன்பு சிறப்பாக பாய்ந்து ஓடிக்கொண்டிருந்த நதிகளை எல்லாம் இப்பொழுது பார்க்க முடிவதில்லை. மணல் கொள்ளை மூலமாக மணல்களை எடுப்பதால் நிலத்தடி நீர் ஆழம் இன்னும் அதிகமாகிக் கொண்டு போகிறது. மேலும் தண்ணீர் தொழிற்சாலை மூலமாக பல்லாயிரக்கணக்கான அடிகள் தோண்டி நிலத்தடி நீரை எடுத்து வெளிமாநிலத்திற்கு அனுப்பி பணம் சம்பாதித்து கொண்டிருக்கிறார்கள்.

மட்டுமே மிஞ்சும். வருங்கால சந்ததியினர் இருக்க மாட்டார்கள். புவி வெப்பமயமாவதை தடுப்பதற்கு மழை நீர் சேகரிப்பு அவசியமாகிறது. வருடாவருடம் மழை நீர் சேகரிக்கும் குழாய்களை சரி பார்க்க வேண்டும். தமிழக அரசு மழை நீர் சேமிப்பு திட்டம் செயல் படுத்திய போது அனைவரும் செயல் படுத்தினர். ஆனால், இப்பொழுது அனைவரும் மறந்த நிலையில் தான் உள்ளோம்.

எல்லாவற்றிற்கும் அரசு சட்டம் இயற்றி கட்டாயப்படுத்த வேண்டும் என நினைக்காமல் நமக்கான வாழ்வாதார பிரச்சனை அதை நாம் தான் சரி செய்து கொள்ள வேண்டும். அனைவரும் தெரிந்தே பூமியை மாசு படுத்துவதில்லை. தொண்ணூறு சதவீதத்தினர் தெரியாமல் தான் புவியை மாசு படுத்திகொண்டிருக்கிறோம். அதன் வீரியத்தையும்,விளைவுகளையும் நாம் அறிந்திருக்கவில்லை. நாம் பயன்படுத்திய குப்பையில் போடும் பிளாஸ்டிக் பொருட்கள் 200 ஆண்டுகள் அப்படியே அழியாமல் இருக்கும். முடிந்த வரை பிளாஸ்டிக் பயன் படுத்துவதை தவிர்க்கலாம், தேவைஏற்பட்டால் மட்டுமே பிளாஸ்டிக் பயன் படுத்தவேண்டும், டீ குடிக்கவும் தண்ணீர் குடிக்கவும் பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்தாமல் காகிதம் கண்ணாடி போன்ற பொருட்களை பயன்படுத்தலாம். அதி வேகமாய் பூமியை மாசு படுத்தி விட்டோம். அதை விரைவில் சரி செய்து விட முடியாது. சிறுக சிறுக தான் சரி செய்ய முடியும், இதில் அரசாங்கம் என்ன செய்யும என்று நினைக்காமல் நம்மால் முடிந்த விஷயங்களில் பூமியை பாதுகாப்போம்.

சுற்றுப்புறத்தை காக்க நம்மால் முடிந்தவை...

குப்பைகளை குப்பை தொட்டியில் போடவேண்டும். மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து குப்பையில் போடவேண்டும்.

கழிவுநீர் வடிந்து கொண்டிருந்தால் நாமே நேரடியாக சென்று புகார் தரலாம்.

சென்னை மாநகராட்சியிடம் புகார் கொடுக்க : 1913 / எஸ்.எம்.எஸ்.9789951111/ 25381651/ 25384530 / 9445150999,


வாகனத்தில் அதிக புகை வந்தால் உடனே கவனிக்க வேண்டும்.


மணல் கொள்ளையை தடுப்போம். முடித்தால் வழக்கு தொடரலாம் மணல் எடுக்க கூடாதென்று.

தண்ணீரை சிக்கனமாய் பயன் படுத்துவோம். எங்காவது தண்ணீர் வீணாக போய் கொண்டிருந்தால் அதை சரி செய்வோம்.

மழை நீரை சேகரிப்போம்.

நம்மால் முடிந்தவரை எத்தனை மரம் வளர்க்க முடியுமோ அத்தனை மரங்கள் வளர்ப்போம்.

இன்றே உறுதி மொழி எடுத்து கொள்வோம். ஆளுக்கு ஒரு மரம் நட்டு வைத்து அதை பராமரிப்போம்... நமது வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் அவர்கள் நினைவாக ஒரு மரம் நட்டு வைத்து, அந்த குழந்தைக்கு மரம் வளர்ப்பதன் அவசியத்தை சொல்லி சொல்லியே குழந்தைகளுக்கு இயற்கை மற்றும் மரங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

இப்படி சின்ன சின்ன விஷயங்களை செய்தாலே மேலும் வெப்பமயமாவதிலிருந்தும், மாசடைவதிலிருந்தும் பூமியை காப்பாற்றிவிடலாம்.

எழுதியவர் : (18-Jan-18, 9:36 am)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 54662

சிறந்த கட்டுரைகள்

மேலே