சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் 42 அடு காராதநி பல்க நபி மானமு – மனோரஞ்ஜநி

பொருளுரை: ‘அவ்விதம் நேராது’ என்று உறுதி கூற உனக்கு என்னிடம் அபிமானம் இல்லாமல் போய் விட்டதா?

நான் எப்படிப் பொறுப்பேன்? என் ஐயனே! கருணை கூர்ந்து என்னைப் பார்; இது எந்த தெய்வம் செய்யுங் கொடுமையோ?

வேதங்கள், சாத்திரங்கள், உபநிஷத்துக்கள் முதலியவற்றை நான் நன்கு கற்றிருந்தும், என் ஸ்வதர்மத்தை அனுஷ்டித்துக் கொண்டு உன் தாசனாக விளங்கியும் என் மீது நீ குற்றஞ் சாட்டினால் (எனக்கு வேறு கதி ஏது?)

பாடல்

பல்லவி:

அடு காராதநி பல்க நபி மானமு லேகபோயெநா (அடு)

அநுபல்லவி:

எடுலோர் த்துநு *ஓ தயஜூடவய்ய
ஏவேல்பு ஸேயு சலமோ தெலிஸி (அடு)

சரணம்:

வேத சாஸ்த்ரோபநிஷத் விதுடைந
நிஜதாரிநி பட்டி தாஸுடைந
நாதுபை நெபமெஞ்சிதே த்யாகராஜநுத (அடு)

*நே தயஜூட

யு ட்யூபில் atugArAdhani_balka - manOranjani - Adhi – thyAgarAja என்று பதிந்து ப்ரியா சகோதரிகள் (சண்முகப்ரியா – ஹரிப்ரியா) பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் Jayanthi Kumaresh 01 aTu kAradAnI palka என்று பதிந்து ஜெயந்தி குமரேஷ் வீணையில் இப்பாடலை வாசிப்பதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் Atukaradani-raga-manoranjani-Tyagaraja- అటు కారాదని పల్క-- by M Balamuralikrishna என்று பதிந்து Dr.M.பால முரளி கிருஷ்ணா பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (18-Jan-18, 9:24 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 66

மேலே