கல் சொல்லும் கதை

இருக்குமிடம் போதாதென்று
கடலிலும்
இடந்தேடும் மனிதனே,
முடிவில் உன் தேவை
ஆறடி கூட வேண்டாமே..

ஆனாலும்
கல்லைப் புதைத்து
எல்லை போட்டு
எல்லாம்
எனக்கே என்கிறாய்..

கல் நின்று நிலைத்து
சொல்லும் கதை-
முடிந்துவிட்ட உன் கதைதான்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (19-Jan-18, 7:17 pm)
Tanglish : kal sollum kathai
பார்வை : 91

மேலே