இலக்கை நோக்கி ஓடு

நதி போல ஓடு,
கடலை நோக்கி ஓடு,
அணை தடுத்தால் என்ன
முயற்சி மழையை பொழிந்து
கொண்டே ஓடு,

ஓடையாக தேங்கி
சக்கடையாக மாறாதே
இலக்கை நோக்கி ஓடு,

இணை நதிகளை
துணை கொண்டு,
இலக்கை நோக்கி ஓடு

வள்ளுவர் வாக்கு பொய்யாகது
முயற்சி திருவிணையாக்கும்
மெய்வருத்த கூலி உண்டு
இலக்கை நோக்கி ஓடு.....

எழுதியவர் : செ.நா (20-Jan-18, 12:21 pm)
Tanglish : ilakkai nokki odu
பார்வை : 2431

மேலே