கலங்காதே விழியே

ஒருநாள்வாழும்
மலர் கூட
அழகாய்
சிரித்துக்கொண்டிருக்க
பலநாள் வாழும்
என் உயிரே
சிறு தோல்வி
கண்டு கலங்காதே
இன்று உன்னை
விலகிச்சென்ற வெற்றி
ஒருநாள் உன் முயற்சி
கண்டு வியக்கும்
நீ பெற்ற தோல்வி
உன்னை வெற்றிப்பாதைக்கு
அனுப்பும்
கலங்காதே விழியே....!

எழுதியவர் : மு.ராம்குமார் பிஇ kallur (21-Jan-18, 1:55 pm)
பார்வை : 2053

மேலே