நிஜமற்ற நினைவுகள்

ஒரு நொடி பிரிவைகூட தராத நீ,
ஒரு திங்கள் நிறைவுற்றும் உன் முகம் காட்ட மறுக்கிறாய்...
நிஜமாய் நேரில் உன்னைக் கண்ட என் கண்கள்,
கனவாய் உன் முகம் காட்டுவாய் எனத் தேடித் தொலைகிறது...
நிழலாய்ப் போனது அனைத்தும்!
நிஜமற்ற நினைவுகள் மட்டும் சொந்தம் எனக்கு!!!

எழுதியவர் : பபியோலா (21-Jan-18, 7:22 pm)
பார்வை : 106

மேலே