மனிதன் உணர்வு

போதிக்க புத்தன் தேவையில்லை,
புத்தி கொண்ட மனிதன் போதும்!!!
சாதிக்க சித்தன் தேவையில்லை,
யுக்தி கொண்ட மனிதன் போதும்!!!
ஆராய்ச்சி செய்ய அகத்தியர் தேவையில்லை,
சாட்சி கொண்ட மனிதன் போதும்!!!
புரட்சி செய்ய பாரதியார் தேவையில்லை,
உணர்ச்சி கொண்ட மனிதன் போதும்!!!

உயிர் கொண்ட அனைத்தும்
உயிரினம் மட்டுமே???
உணர்வு கொண்ட உள்ளம்
மட்டுமே மனித இனம்...

எழுதியவர் : அர்ஜூன் (21-Jan-18, 10:44 pm)
Tanglish : manithan unarvu
பார்வை : 308

மேலே