பன்முக தன்மை
தமிழனாக,
பன்முகம் வளர நினைத்தேன்,
பலவற்றை இழந்தேன்.
இழந்தது தெரியவில்லை, காரணம் இழந்ததே என்னவென்று தெரியாமல் நான்.
விழிக்க நினைத்தேன் முடியவில்லை,
காரணம் விழிகளை இழந்தவர்களின் தலைவனாக நான்.
இதை ஏற்றபதா? என்று தெரியவில்லை,
காரணம் பல கேள்விகளின் தொகுப்பு நான்.
இறுதியாக இந்த வினாக்களுக்கு விடை காண நினைத்தேன்,
காரணம் என்னவோ! கற்றதில், கற்பித்தில் பன்முக தன்மையில் நான்.