ரதியே ரகசியத் தோழியே ,,,
காவியக் காதலொன்று கற்பனையில் பூக்குதடி ,,,
முகுர்த்த நாள் எண்ணி மூச்சினுள் இறைக்குதடி ,,,
உன்னோடு நானிருக்க உயிரோடு கோர்த்திருக்க
உள்ளுக்குள் ஏக்கமடி ,,,
ரதியே ,,,!
ரகசியத் தோழியே ,,,!
தோல் மீது சாய்ந்து கொள்
என்னை துப்பட்டாவில் போர்த்திக்கொள் ,,,,
பொழுது சாய்கையில் ,,,!
கரு மை கண்ணால் முறைக்காதே
கடிகாரம் பார்க்காதே ,,,
என் நெருக்கங்கள் குறைக்காதே
உன் வீடு செல்ல துடிக்காதே ,,,,!
பிறை நிலவு வருகையில்
என் முழு நிலவிற்கு கோவம் ஏனோ ?
உயிர் தீரும் வரை உடன் வா
உள்ளத்தில் மட்டும் அல்ல உண்மையிலும் ,,,,,!