காதல்-என்னவள்
உந்தன் வேல்விழிப் பார்வை
என் மனதை காந்தமாய் இழுத்துக்கொள்ள
நீல ஒளி கற்றைகள் கக்கும் உந்தன்
காதணி வைரக் கற்களென்றால் -
நீ சிந்தும் மோகன மௌன புன்னகையோ
மின்னும் நவரத்தினமாய் பூத்து
குலுங்குதடி வஞ்சி உந்தன் தேன்
சிந்தும் இதழ்கள் ஓரத்திலே -இப்படியும் ஓர்
இளமைப் பூரிப்பா என்று உந்தன் மேனி
அழகில் நான் மூழ்கிவிட அங்கு
உந்தன் கால்களில் பூட்டிய சலங்கை ஒலி
தேவகானமாய் என் காதில் வந்திசைத்ததடி
மீண்டும் தலை தூக்கி உன்னை நான்
பார்த்தப்ப போது நீல பட்டு சீலை உந்தன்
தங்க மேனியை கட்டி தழுவி இருப்பதைக் கண்டேனடி
என்ன பாக்கியம் செய்ததோ உந்தன் வண்ண சீலை
உந்தன் காதலன் என்முன்னே உன்னை இப்படி
கட்டி அணைத்து விளங்குதடி - இப்படியே
பொற்சிலையாய் நடந்து வந்தாய் வந்து
உன்னைப் பார்த்தும் பார்க்கதிருந்த என்னை
மெல்ல தட்டி என் காதில் ரகசியமாய் நாணம் கொண்டு
'அத்தான்; 'என்னத்தான். என்று கூற அதில்
'பூபாளம்'இசைப்பதை நான் கேட்டு. துயில் துறந்து
விழித்து கொண்டேனடி என்னவளே; உன்னைப்போல்
ஒருத்தியை காதலியாய் பெற்றதற்கு என்ன தவம்
நான் செய்தனனோ முன் பிறவியிலே .
நான் தேடும் ராகமாய் உன்னை நான் நினைக்க
'இசையே.' நாந்தான் என்று நீ கூறுவதுபோல்
உணர்ந்தேன் ..................................என்னவளே .