வீர பாண்டிய கட்டபொம்மன்
வீர பாண்டிய கட்டபொம்மன்
ஜனவரி 3ல் பாஞ்சாலக்குறிச்சியில் பிறந்தவனே
30ம் வயதில் பாளையக்காரர் பொறுப்பை ஏற்றவனே
ஒன்பது ஆண்டுகள் ஆட்சி செய்தவனே
ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவனே
வரி வசுலிக்கமுடியாமல் வெள்ளையனை திண்டாடச் செய்தவனே
யாரைக் கேட்கிறாய் வரி, வட்டி என நீ கூறிய வசனம் இன்று வரை மனதில் பசுமரத்தாணி போல் பதியச் செய்து விட்டவனே
உன வரலாற்றை சிவாஜி நடித்து, சர்வதேச விருதை பெறச் செய்தவனே
தூக்குமேடை ஏறிய போதும் மரணத்தை துச்சமாக நினைத்தவனே
கயத்தாற்றில் சுதந்திர போராட்ட வீரனாய் உயிர்துறந்தவனே
வாழ்க உன் தீரச் செயல்! ஒங்குக உன் நாமம்