தமிழன்

ஆதித் தமிழன் நாங்கடா!
இனி ஆளப்போறோம் வாங்கடா!
ஆண்டு வந்த கூட்டமெல்லாம்
என் தமிழன் வாழ்ந்த தோட்டமடா!
எங்கள் இனமே தமிழடா!
எங்கள் உயிரே தமிழடா!
எங்கள் உறவே தமிழடா!
அரசாட்சிகள் தோன்றும் முன்னே
ஆண்டு வந்த கூட்டமடா!
எங்கள் உயிர் மொழியாகினும்
எங்கள் தமிழ்மொழியை
என் நாட்டிற்குத் தலைவனாக்குவோம்!
எங்கள் தமிழ் மக்களைத்
தமிழ் மண்ணில்
ஒரு பாடமாக்குவோம்!
பல யுகங்கள் கழிந்தாலும்
தமிழின் தோற்றமும் மாறாது!
தமிழரின் மரபும் மாறாது!
ஆதித் தமிழன் நாங்கடா!
இனி ஆளப்போறோம் வாங்கடா!
அடிமைத் தமிழனா நாங்கள்?
இனி ஆளும் தமிழனே நாங்கள்!
உப்பிட்டவரை உள்ளளவும்
நினைப்போம்!
தமிழ் இனத்துக்கு ஒன்றானால்
உங்கள்
உயிரறுப்போம்!

என்றும் அன்புடன் நாகங்குடி க.தி.வெங்கட்கோபி

எழுதியவர் : க.தி.வெங்கட்கோபி (22-Jan-18, 3:23 pm)
Tanglish : thamizhan
பார்வை : 839

மேலே