😭😭😭😭என் காதலே😭😭😭😭

நிஜத்தில் நித்திரை கூட நிம்மதியில்லை…
ஆனால் காதலில் -
கனவுகள் கூட காவியம் தான்…

உண்மையில் தலை எழுத்து கூட தெளிவாயில்லை…
ஆனால் காதலில் -
கிறுக்கல்கள் கூட கவிதை தான்…

நிஜத்தில் சிரிப்பு கூட சுகமாய் இருந்ததில்லை…
ஆனால் காதலில் -
கண்ணீர் கூட கண்டெடுத்த செல்வம் தான்…

உண்மையில் தோழமை கூட துணையில்லை…
ஆனால் காதலில் -
என் தனிமை கூட தித்திப்பாய் இருந்தது…

எல்லா சுகத்தையும் தந்தாய் —
என் காதலே….
அவளை மட்டும் ஏன் தர மறுத்தாய்…????

கவிப் புயல்
சஜா. வவுனியா
இலங்கை

எழுதியவர் : சஜா (22-Jan-18, 8:09 pm)
சேர்த்தது : சஜா
பார்வை : 241

மேலே