முதுமொழிக் காஞ்சி 2
குறள் வெண்செந்துறை
ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல். 2
சிறந்த பத்து, முதுமொழிக் காஞ்சி
பொருளுரை:
பிறர் தன் மேல் வைத்திருக்கும் அன்பை விட, ஒருவன் தான் பெற்றிருக்கும் மதிப்பினால் பிறர் அஞ்சி நடப்பதற்கேற்ற நன்மதிப்புடன் வாழ்வதே சிறந்தது.
பிறருடைய அன்பினும் நன்கு மதிப்பே சிறந்தது என்பதாம்.
கண்ணஞ்சுதல் - ஒருவன் தான் பெற்றிருக்கும் மதிப்பினாலே பிறர் அஞ்சி நடத்தல்.
கண்ணஞ்சப்படுதல் - பிறர் அஞ்சி நடக்கத்தக்க நன்மதிப்பு.