சில தியாகராஜ கீர்த்தனைகளும் பொருளுரையும் 44 – ரார ஸீ தாரமணீ மநோஹர – ஹிந்தோள வசந்த

பொருளுரை:

சீதையின் உள்ளங் கவர்பவனே! என் எதிரில் வாராய்! தாமரைக் கண்ணனே! தீரனே! எனக்கு ஒரு முத்தம் தாராய்!

சிறு பொன்னடையொன்றை உனக்கு நான் அழகுற அணிவித்து, உன்னை மேலும் அலங்கரித்துச் சேவித்து, மார்புறத் தழுவுவேன்.

உன் நெற்றியின் மீது கஸ்தூரிப் பொட்டிட்டு, சிறந்த நன் முத்து மாலையை உன் கழுத்தில் அணிவிப்பேன்.

உன் மீது பக்தி பூண்டொழுகுவதே யோகமே தவிர எங்களுக்கு வேறு கதி யாது?

பாடல்:

பல்லவி:

ரார ஸீ தாரமணீ மநோஹர (ரா)

அநுபல்லவி:

நீரஜநய ந யொக முத் தீர தீ ர முங்க ல (ரா)

சரணம்:

ப ங்கா ரு வல்வலு நே பா கு க கட்டெத மறி
ச்ருங்கா ரிஞ்சி ஸேவ ஜேஸி கௌகி ட ஜேர்ச்செ த (ரா)

ஸாரெகு நுது டநு கஸ்தூரி திலகமு பெ ட்டெத
ஸாரமைந முக்தா ஹாரமுல நிக தி த் தெ த (ரா)

யோக மு நீபை யநுராக மு கா நி வே
றே க தியெவரு ஸ்ரீ த்யாக ராஜ விநுத (ரா)

யு ட்யூபில் Thyagaraja Kriti-rA-rA-sitAramani--hinolavasantam--rUpaka--TV Sankaranarayanan என்று பதிந்து T.V.சங்கரநாராயணன் பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் Rara Seetha - Sowkyam - Dr.S.Ramanathan என்று பதிந்து Dr.S.ராமநாதன் பாடுவதைக் கேட்கலாம்.

யு ட்யூபில் MD Ramanathan - rAra sItA ramaNI manOhara - hindOLavasantam - tyAgarAja என்று பதிந்து M.D.ராமநாதன் பாடுவதைக் கேட்கலாம்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Jan-18, 11:30 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 97

மேலே